பூமிக்குள் இதுவரை துளையிட்டதிலேயே அதிகபட்ச ஆழம் 13 கிலோ மீட்டர். பூமியின் மையப்பகுதியை அடைய வேண்டும் எனில், இதைப் போல 500 மடங்கு துளையிட வேண்டும்.
*பூமித்தட்டுகள் எப்போதும் நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 2.5 சென்டிமீட்டர் தூரம். ஓராண்டில் நம் நகங்கள் வளர்வதும் ஏறத்தாழ இதே அளவுதான்!
*வெதுவெதுப்பான, சூரிய ஒளி நிறைந்த ஆழ்கடல் பகுதிகளிலேயே பவழங்கள் காணப்படுகின்றன.
*6,690 கிலோமீட்டர் நீளம் கொண்ட, உலகின் மிக நீளமான நைல் நதியும் காலத்தின் கோலத்தில் சுருங்கி வருகிறது.
*உலகின் மிகப்பெரிய ஆற்றுக் கழிமுகம் (டெல்டா), 77 ஆயிரத்து 700 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. கங்கை, பிரம்மபுத்ரா நதிகளால் உருவான இந்த டெல்டா, இந்தியாவிலும் பங்களாதேஷிலும் பரவியுள்ளது.
*நிலவில் அமெரிக்கக் கொடி வைக்கப்பட்டிருந்தாலும், ஒரு போதும் அந்தக் கொடி பறப்பதில்லை. காரணம் காற்றின்மை!
*கலிபோர்னியாவிலுள்ள ஒரு செம்மரத்தின் அடிமரச் சுற்றளவு 24 மீட்டர். உயரம் 83 மீட்டர். இந்த பிரமாண்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், இம்மரத்துக்கு ‘ஜெனரல் ஷெர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
*ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான பிளாங்க்டன் போன்ற உயிரினமாகத்தான் பிறக்கிறது, மிகப்பெரிய ஆக்டோபஸும் கூட. நண்டு, நட்சத்திர மீன் போன்றவையும் பிறப்பால் சின்னஞ்சிறு உயிரிகளே!
*Echinoderm என்ற கடல்வாழ் குடும்பத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிக இனங்கள் உண்டு. ஆனாலும், அவற்றில் 5 முக்கியப் பிரிவுகள்தான். இக்குடும்பத்தின் பிரதான உயிரினம் நட்சத்திர மீன்!
*டைனோசரை விடவும் பல மடங்கு மிகப்பிரமாண்டமான உயிரினமான நீலத்திமிங்கலம், 33 மீட்டர் நீளம் வரை வளரும்.

No comments:
Post a Comment