GOOGLE

Sunday, 23 April 2017

அமெரிக்காவின் எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமை உள்ளது : வடகொரியா சவால்


அமெரிக்காவின் எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமை உள்ளது : வடகொரியா சவால்


2017-04-22@ 20:29:14

பியாங் கியாங்: அமெரிக்காவின் எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமையுடன் தயார் நிலையில் உள்ளதாக வடகொரியா கூறியுள்ளது. ஐ.நா. விதித்துள்ள தடைகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரிசோதிப்பதால் பெரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து நவீன ஆயுதம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதை சமாளிக்க தயாராக இருப்பதாக வடகொரியா கூறியுள்ளது.

வடகொரியா அதன் ராணுவ தினத்தை வரும் 25-ம் தேதி கொண்டாட உள்ளது. இதையொட்டி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சோதனை நடத்தப்பட்டால் வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment