திருவாரூர்: விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மிகப்பெரிய வெற்றி என திருவாரூரில் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர், விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். திருவாரூரில் என்னையும் மற்ற தலைவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எங்களை 4 கிலோ மீட்டர் நடக்க வைத்ததால் மிகப்பெரிய பேரணியே நடந்து விட்டது என்று அவர் தெரிவித்தார். விவசாயிகளின் போராட்டம் பற்றி மத்திய அமைச்சர் வெங்கையா தவறான தகவல் கூறியிருக்கிறார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். வங்கிக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்வதில்லை என்று தவறான தகவலை கூறியிருக்கிறார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது விவசாயிகளின் வங்கிக்கடன் 10,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக அரசு குடிநீர் பிரச்சனையை தீர்க்காமல் மதுக்கடையைத் திறக்க ஆர்வம் காட்டுகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதிமுகவில் பதவியை ஏலம் போடும் நிலை உருவாகியுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். யார் முதலமைச்சர் என்ற கட்டப்பஞ்சாயத்து அதிமுகவில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் முதல்வர் பதவிக்குரிய தகுதி, திறமை பழனிசாமிக்கு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment