♂.. ♥.. ♀..
அன்றொரு நாள்..
மழைகாலம்..
பூங்காவில்
ஆலமரக் குடையில்
உன்னருகில் நான்!
காதலி நீ கவிதை கேட்டாய்..
"மேடு பள்ளம்
வளைவு நெளிவு
ஏற்றம் இறக்கம்..
இவை கொண்ட பாதை நீ..!
உன்னில் மழைவெள்ளமாய்
என்னை பொழியவிடு..!"யென்று
முடிப்பதற்குள்..
"ச்சீய்...."யென்று
சிலிர்த்தாய்..
உன் எச்சில் தூறல்
எனை நனைத்து
என் செல்களில்
எல்லாம் அடை-மழை!
♂.. ♥.. ♀..
No comments:
Post a Comment